மேட்டூர் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ள தண்ணீர் குட்டப்பட்டியை சேர்ந்த தங்கராஜ், கமலா தம்பதியின் மகன் அருண்குமார் (30). இவர் சேலத்தில் உள்ள அசோக் லைலாண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அருண்குமாருக்கும், நங்கவள்ளி கரட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் மகள் குமுதா (27), என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், குமுதாவிற்கும் அவரது கணவர் அருண்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது குமுதா கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் குமுதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி குமுதாவின் தந்தை லட்சுமி நரசிம்மன் நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
====>>
மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)