செய்தியாளர்: மோகன் ராஜ்
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா சென்ற பயணிகள் விரைவு ரயில் சேலத்திற்கு வந்தது. அப்போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பேக் ஒன்றை சோதனை செய்தனார். அதில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரயில் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அதை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.