மாவட்ட ஆட்சியர் pt desk
தமிழ்நாடு

சேலம் | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது நேர்ந்த விபரீதம் - 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி

ஓமலூர் அருகே நாட்டு வெடி வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள், உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடந்து வருகிறது. இதில், 15-ம் நாள் விழாவாக அம்மனுக்கு திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் சார்பில் ஏற்கனவே ஒரு சீரவரிசை கொண்டு சென்ற நிலையில், மற்றொரு தரப்பினர் நாங்களும் சீரவரிசை கொண்டு வருவோம் என தேங்காய் வெடி எனப்படும் நாட்டு வெடியை வெடித்தபடி ஊர்வலம். வந்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாட்டு வெடிகளை எடுத்துக் கொண்டு, வழியெங்கும் வெடித்தபோது மேலே. சென்ற வெடி, மின்சார வயரில் பட்டு, கீழே மோட்டார் சைக்கிளில் இருந்த வெடி மூட்டை மீது விழுந்து, இதில், அனைத்து வெடிகளும் வெடித்துச் சிதறியது. அப்போது பட்டாசை மாலையாக அணிந்து கொண்டு பைக்கில் அமர்ந்திருந்த செல்வராஜ், சிறுவர்கள் கார்த்திகேயன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

வெடி வெடித்த லோகநாதன் சேலம். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், உயிரிழந்தார். 4 பேர் இறந்ததை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.