தமிழ்நாடு

“இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும்” - போக்குவரத்துத் துறை

“இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும்” - போக்குவரத்துத் துறை

Rasus

சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்கள் இன்று காலை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. வழக்கமாக மாத இறுதி நாளில் ஊதியம் வழங்கப்பட்டு விடும் நிலையில் ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பேருந்து பயணத்தை நம்பியிருக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த அவதியுற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவுக்குள் சென்னை மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. குறைவான ஊதியம் வழங்கப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.