தமிழ்நாடு

’’கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படும் நேரம் வந்துவிட்டது’’ - ஜகி வாசுதேவ்

’’கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படும் நேரம் வந்துவிட்டது’’ - ஜகி வாசுதேவ்

Sinekadhara

தமிழகத்திலுள்ள கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்கும் நேரம் வந்துவிட்டது என ஜகி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கோயில்களில் சிலைக் கடத்தல் மற்றும் சிலை உடைப்பு போன்ற குற்றங்கள் நீண்ட நாட்களாகவே நடந்துவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் இந்த பிரச்னை உள்ளது. கோயில்களை பக்தர்கள்தான் நிர்வகிக்க வேண்டுமென பலரும்  நீண்ட நாட்களாகவே தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், ஈஷா அறக்கட்டளையின் நிர்வாகி ஜகி வாசுதேவும் தற்போது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ‘’தமிழக கோயில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல’’ என்று கூறியுள்ளார்.