தமிழ்நாடு

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டால் பலன் நிச்சயம்: ஜகி வாசுதேவ் கருத்து

JustinDurai
தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழ்நாடு இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள்" என்று முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வேளாண் துறைக்கான இந்த தனி பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் வரவேற்க்கத்தக்க அம்சங்கள் ஆகும்" என்று ஈஷா அறக்கட்டளையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.