கேரளா சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாத மண்டல பூஜை நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இன்று நடைதிறக்கப்பட்டு விசேஷ பூஜைககள் நடைபெறுகின்றன. இந்த விஷேச பூஜைகளில் மேல் சாந்தி தேர்வு, மகாராஜா சித்திரை திருநாள் பிறந்த நாள் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தற்போதைய மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து பூஜைகளை மேற்கொள்கிறார்.