தமிழ்நாடு

மீண்டும் புதிய கட்சி தொடங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

மீண்டும் புதிய கட்சி தொடங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்

Rasus

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 'அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம்' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தார். அத்துடன் கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், “ எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் அந்தக் கட்சி தொடர்பான முடிவிலிருந்து சந்திரசேகர் பின்வாங்கிக் கொண்டார்.

இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள சந்திரசேகர், மீண்டும் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதன்படி 'அப்பா எஸ்.ஏ.சி.மக்கள் இயக்கம்' என புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சிக்கு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இக்கட்சியை வரும் பொங்கல் பண்டிகையன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என பேசப்படுகிறது.