தமிழ்நாடு

"மத்திய தொல்லியல் பட்டயப் படிப்பு பயில தமிழ் புறக்கணிப்பு" - எம்.பி. சு.வெங்கடேசன்

webteam

மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழுக்கு இடமில்லை என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் விளம்பரத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த விண்ணப்பத்தில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவற்றில் சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம், அரபு அல்லது பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செம்மொழி அந்தஸ்தில் உள்ள தமிழ் மொழி இடம்பெறவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியுள்ளார்.