காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் முருகன் கோயிலின் வாயிலில் நின்று ரஷ்ய இளைஞர் ஒருவர் யாசகம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரத்தி்ல் பிரபல குமரகோட்ட முருகன் கோயில் உள்ளது. இன்று காலை இந்தக் கோயில் வெளியே, ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்கு வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு கொண்டிருந்தார். ஒரு வெளிநாட்டுக்காரர் கோயிலுக்கு வெளியே யாசகம் கேட்டு நிற்பதை கண்ட, பக்தர்கள் அவரை ஆச்சரியமாக பார்த்து சென்றனர். சிலர் அவர்களால் இயன்றதை கொடுத்துவிட்டு சென்றனர். தனது கையில் தொப்பியை வைத்தவாறு அவர் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.
சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் பெயர் எவிக்ட்னி என்பதும் முறையாக பாஸ்போர்ட், விசா வைத்திருப்பதும் தெரியவந்தது. அவருடைய ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டதால்தான், இந்த மாதிரி செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின் காவல்துறையினர் பணம் கொடுத்து அவரை சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.