தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கடிதம்

kaleelrahman

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாநில போலீஸுக்கு பதில் சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்த வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.