அக்டோபரில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் பாமக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை, நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகங்களில்; மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ 4,000, ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ. 2000 கட்டணம் செலுத்தி வேட்பு மனுக்களை பெறலாம் என அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெறலாம் - அதிமுக