ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோர் மாவட்ட கட்சி அலுவலங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர் தலா 5 ஆயிரம் ரூபாயும், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர் தலா 3 ஆயிரம் ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விருப்பமனு அளித்திருந்தவர்கள், அதற்கான அசல் ரசீது மற்றும் நகலை சமர்ப்பித்து கட்டணமின்றி மீண்டும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: மதுரை: 21 மணி நேரத்திற்கு ரூ. 500 பார்க்கிங் கட்டணமா? - அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்