தமிழ்நாடு

ஓடும் ரயிலில் திருடியது எப்படி ? - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்

ஓடும் ரயிலில் திருடியது எப்படி ? - கொள்ளை கும்பல் தலைவன் வாக்குமூலம்

webteam

ஓடும் ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள கும்பலின் தலைவன் மொஹர் சிங், திட்டமிட்டு திருடியது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓடும் ரயிலை துளையிட்டு 5 கோடியே 78 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கொள்ளை குறித்து கொள்ளையர்களின் வாக்குமூலத்தை ‌நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளை அடிக்கும் முன்பு ‌விருத்தாசலம் - அயோத்திபட்டிணம் வரை ஒரு வாரம் ரயிலில் பயணித்ததாக மொஹர் சிங் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ‌ரயில் நிற்கும் இடம், மெதுவாக செல்லும் இடம் ஆகியவற்றை கண்காணித்து சின்னசேலத்தில் ரயில் என்ஜின் மீது ஏறி பணம் இருந்த பெட்டிக்கு சென்றாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இயந்திரத்தின் உதவியுடன் ரயிலை துளையிட்டு 6 லுங்கிகளில் கையில் கிடைத்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் மொஹர் சிங் கூறியுள்ளார்.