தமிழ்நாடு

ஓட்டம்பிடித்த மணப்பெண்: நஷ்ட ஈடு கேட்டு காவல்நிலையத்தை நாடிய மணமகனின் குடும்பம்!

ஓட்டம்பிடித்த மணப்பெண்: நஷ்ட ஈடு கேட்டு காவல்நிலையத்தை நாடிய மணமகனின் குடும்பம்!

webteam

பூந்தமல்லி அருகே கடைசி நேரத்தில் மணப்பெண் தப்பி ஓடியதால், மணமகள் வீட்டார் தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென மணமகன் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் முடிவு செய்தனர். அதன் படி நேற்று மாலை நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் இன்று காலை திருமணமும் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு இரு வீட்டாரும் தயாராகி கொண்டிருக்க, மணமகன் நேற்று இரவு மண்டபத்திற்கு வந்தார்.

ஆனால் நீண்ட நேராமாகியும் அழகு நிலையத்திற்கு சென்ற மணப்பெண் வந்தபாடில்லை. அதனைத்தொடர்ந்து மணமகள் வீட்டை தொடர்பு கேட்ட போது, மணப்பெண் மாயமாகி விட்டதாக கூறியுள்ளனர். அதன் காரணமாக கோபடைந்த மணமகன் வீட்டார், திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களை உறவினர்கள் கிழித்தனர்.

இது மட்டுமின்றி திருமணம் நின்று போனதால் மணமகள் வீட்டார் தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் மணமகள் வீட்டார் புகார் அளித்தனர்.