தமிழ்நாடு

தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள்: ஸ்டாலின்

தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள்: ஸ்டாலின்

webteam

தமிழகத்தில் விரைவில் நடைபெறக்கூடிய தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக இருப்பதையே, 5 மாநில தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்திருப்பதையே காணமுடிவதாக ஸ்டாலின் கூறினார். விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும், ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.