தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Rasus

பத்தாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான நெறிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்துக்குரிய கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்துக்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளர்.

அந்ததந்த பணிகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அந்தப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மை கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என விவரம் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலை வாய்ப்புக்கு எத்தகைய உரிமையும் கோர முடியாது என்ற விவரமும் குறிப்பிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.