தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

webteam

தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது. இதில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தை முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் வரும் 28 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ரூபல்லா தடுப்பூசி போடப்பட்ட 1 வாரத்திற்குள் குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.