தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் ரப்பர் தொழில் பாதிப்பு

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க ரப்பர் தொழிலாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டியெடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் கடந்த 10 நாட்களாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகத் தெரிகிறது. ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இதுபோன்று பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ரப்பர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பல ஆண்டுகள் முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குறை கூறினர். தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் அதிகமாக ரப்பர் தொழில் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.