தமிழ்நாடு

குறைந்த செலவில் தரமாக தயாரான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்

குறைந்த செலவில் தரமாக தயாரான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம்

jagadeesh

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான தரமான தமிழ் திரைப்படங்களுக்கு, மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

2015, 2016 மற்றும் 2017 ஆகிய 3 ஆண்டுகளில் வெளியான, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான முழு நீள தமிழ்ப்படங்களுக்கு மானியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நவம்பர் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க‌ வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆர்.கே. செல்வமணி நேற்று கோரிக்கை விடுத்தார். தென்னிந்திய திரைப்பட தொழி‌லாளர்கள் சம்மேளனத்தின் தலை‌வரான அவர், இயக்குநர் சங்க நிர்வாகிகளுடன் நிதி‌யமைச்சரை சென்னையில் நேற்று சந்தித்தார். அப்போது, விலங்குகள் நலவாரியத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.