தஞ்சையில் வங்கி லாக்கரில் இருந்த ரூ. 500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டது.
ரூ.500 கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். தஞ்சையை சேர்ந்த சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்து மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. தருமபுரி ஆதின கட்டுப்பாட்டிலுள்ள திருக்குவளை கோயிலில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டு மரகத லிங்கம் காணாமல் போன நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சாமியப்பனுக்கு மரகத லிங்கம் எப்படி கிடைத்தது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: மதுரை மத்திய சிறையில் கைதிகள் ரகளை: 3 வழக்குகள் பதிவு