வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு என வந்த சூழலில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூன்று கோடி ரூபாய் வரை கோவை மாநகராட்சியில் வரி வசூலாகி உள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளின் வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரித் தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தல், குடிநீர் இணைப்பை துண்டித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் சேர்த்து மூன்று கோடி ரூபாய் வரை வசூலாகி உள்ளது. மாநகராட்சியின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை அறிந்த வரி செலுத்துவோர்கள் உடனடியாக வரித் தொகையை கட்டினர். இதையடுத்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை மாநகரட்சியினர் கைவிட்டனர்.