பணமோசடி வழக்கில் சிக்கிய கோல்ட் குவிஸ்ட் நிறுவனத்தின், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, சென்னை அமலாக்க துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். தங்க காசுகளை விற்று பொதுமக்களிடம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நிறுவனத்தின் ரூ.27 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள்; ரூ.48 கோடி வங்கி டெபாசிட்; ரூ.5.3 கோடி ரொக்க பணம்; ரூ.14 கோடி மதிப்புள்ள நிறுவன பங்குகள் முடக்கப்பட்டுள்ளன.