தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்: ஒரே வாரத்தில் ரூ.13 லட்சம் அபராதம் வசூல்

போக்குவரத்து விதிமீறல்: ஒரே வாரத்தில் ரூ.13 லட்சம் அபராதம் வசூல்

webteam

சென்னையில் கடந்த வாரத்தில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 25 முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை நடத்திய வாகனச் சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 8 ஆயிரத்து 259 வாகன உரிமையாளர்களுக்கு 13 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக 494 பேருக்கும், தலைக்கவ‌சம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியதாக 3 ஆயிரத்து 720 பேருக்கும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 2 ஆயிரத்து 346 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லைசென்ஸ் இல்லாமலும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அபரா‌ம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.