தமிழ்நாடு

ரூ. 1,000 பஸ் பாஸ் ஜூன் 26 வரை பெறலாம் - மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

JustinDurai
விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ. 1,000 அரசு பஸ் பாஸ் ஜூன் 26 வரை பெறலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை வைத்து மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம்.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக பொது பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மையங்களில் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் வரும் 26-ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆம் இருந்த அவகாசம் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே பெற்ற ரூ.1000 மாதாந்திர சலுகை கட்டண பாஸை பயன்படுத்தி ஜூலை 15 வரை பஸ்களில் பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.