தமிழ்நாடு

தொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ.1 கோடி கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது

தொழில் அதிபரிடம் நூதனமுறையில் ரூ.1 கோடி கொள்ளை - முக்கிய குற்றவாளி கைது

webteam

சென்னையில் தொழில் அதிபரிடம் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த அமிர்தா பால் நிறுவன உரிமையாளர் மோகனசுந்தரத்திற்கு வியாபாரத்திற்காக கடன் தேவை என்பதை தெரிந்து கொண்ட இருவர், செல்போனில் பேசி குறைந்த வட்டியில் தேவைப்படும் பணத்தை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். மேலும் அதற்கு கமிஷனாக 1 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை மூன்று முறை போரூரில் சந்தித்த மோகன சுந்தரம், நான்காவது முறை கடந்த 16ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த போது, இருவர் அவர் கொண்டு வந்த 1 கோடி ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. 

பட்டினம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், மோசடி நபர்கள் பயன்படுத்திய காரின் எண் போலியானது எனவும் தெரியவந்தது. சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மோசடி கும்பல் கார் டிரைவர் ஜெயக்குமாரை கடந்த 22ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கொடுங்கையூர் ரசூல்கான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கொள்ளையடித்த 50 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.