தமிழ்நாடு

அமைந்தகரையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள்

அமைந்தகரையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள்

Rasus

சென்னை அமைந்தகரையில் காரில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பிடிபட்டன.

புதிய நோட்டுகளாக மாற்றுவதற்காக தாம்பரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. பணத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்ததுடன், அதில் வந்த ரமேஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் மாற்றுவதற்காக புதிய ரூபாய் நோட்டுகளுடன் வந்த நபர்கள் தப்பிச் சென்று விட்டதால், காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் வருமானவரி புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலநாட்களுக்கு முன்னர் நந்தம்பாக்கம் அருகே 3 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பயன்பட்டதாகவும், அதற்கும் தற்போது பிடிபட்டிருக்கும் பணத்திற்கும் தொடர்புள்ளதாக என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.