தமிழ்நாடு

அலாரத்தை ஆப் செய்துவிட்டு டாஸ்மாக்கில் நூதன கொள்ளை

அலாரத்தை ஆப் செய்துவிட்டு டாஸ்மாக்கில் நூதன கொள்ளை

webteam

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.95 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஊருக்கு வெளியே மண் சாலையில் தனியாக இயங்கி வரும் இந்தக் கடையில், வழக்கம் போல காலை கடை திறக்க ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்க, காவல் துறையினர் கடைக்கு விரைந்துள்ளனர். 

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் உள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொள்ளையில் சுமார் ரூ.1.95 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடு போயுள்ளது. இந்தக் கடையில் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை அலாரம் ஒன்றை பொருத்தி உள்ளனர். இருப்பினும் கடையின் கதவை உடைத்து திருடியவர்கள், நுனுக்கமான முறையில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, எச்சரிக்கை ஒலிப்பானை செயலிழக்க செய்து திருடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.