தமிழகத்தில் கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 8,905 புதிய மின் மாற்றிகள் 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் பணிகளை, முதற்கட்டமாக கொளத்தூரில் 6 இடங்களில் (ஜி.கே.எண். காலணி 25 மற்றும் 30 வது தெரு, லோகோசெட் காந்தி நகர், பிபி நகர் 2வது தெரு, பூம்புகார் நகர் 1வது மெயின் ரோட், யுனைடைட் காலணி 2வது தெரு) மின்மாற்றிகளை மாற்றும் பணிகள் தொடங்க உள்ளன. இதன்மூலம் இத்திட்டம் முதற்கட்டமாக தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க... நிலக்கரி மாயமானதில் அதிமுக ஆட்சியிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: செந்தில் பாலாஜி கேள்வி
இந்த நிகழ்ச்சியில், மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் முதல்வருடன் பங்கேற்றனர்.