தமிழ்நாடு

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை

webteam

 கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஸ்ரீதர். போலீசால் தேடப்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து துபாய் சென்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். 
இதனிடையே அவரது 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது. இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார் என காஞ்சிபுரம் எஸ்.பி.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.