தமிழ்நாடு

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்: 6 மாதத்தில் நிலத்தை ஒப்படைக்கும் தமிழக அரசு?

webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 6 மாதத்திற்குள் தமிழக அரசு நிலத்தை ஒப்படைக்கும். அதைத் தொடர்ந்து உள்கட்டமைப்பு பணிகள் தொடங்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என கனிமொழி எம்பிக்கு பிரமதர் அலுவலகத்தின் தனிப்பிரிவு அளித்துள்ள பதிலில் தெரியவந்துள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் நிறுவப்படும் எனக் கூறப்பட்ட ராக்கெட் ஏவுதளத்தின் தற்போதைய நிலை என்ன? நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதா? உள்கட்டமைப்பினை கட்டிமுடிக்க ஏதேனும் காலக்கெடு வரையறுக்கப்பட உள்ளதா? என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அலுவலக தனிப்பிரிவு, "ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் தாலுகாவில் 961.66 ஹெக்டேர் தரிசு நிலமும், 57.42 ஹெக்டேர் புறம்போக்கு நிலமும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்தி தமிழக அரசு 6 மாதங்களுக்குள் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

கோப்புப் படம் 

மேலும், "உள்கட்டமைப்பு பணியை தொடங்கி முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் ஆகலாம்" என்றும் விளக்கம் அளித்துள்ளது.