சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ரோபோ மூலம் கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 138 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று தீவிரமாகி வருவதால், கொரோனா பணியில் ஈடுபடுகிறவர்களை பாதுகாக்கும் வண்ணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு வெளியே இருந்து ரோபோவை இயக்கி அதில் உள்ள கேமரா மூலம் மக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் மக்களுடன் உரையாடவும் வசதியாக இந்த ரோபா வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக மயிலாப்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான மீனாம்பாள்புரத்தில் ரோபா இயக்கிப் பார்க்கப்பட்டது.
ரோபா தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை பெருநகர காவல்துறை இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ரோபோவை கண்காணிப்புக்கு பயன்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது