தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் 60 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை

வேளாங்கண்ணியில் 60 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை

webteam

நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றவர்களிடம் 60 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

நாகர்கோவிலை சேர்ந்த பீட்டர் என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்திவிட்டு தங்குவதற்கு அறை தேடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர். பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.