மதுரையில் நகைக்கடை அதிபரின் வீட்டில் நுழைந்து 150 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மிளகாய்ப் பொடியைத் தூவிச் சென்றுள்ளனர்.
மதுரை சின்ன சொக்கிகுளம் அப்துல்கபார் கான் தெருவில் வசிக்கும் நகைக்கடை அதிபர் சங்கர், கடந்த 26-ஆம் தேதி குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள், ஜன்னலை உடைத்து சங்கரின் வீட்டுக்குள் உள்ளே நுழைந்துள்ளனர். பீரோவையும் உடைத்து அதிலிருந்த 150 சவரன் நகைகள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கதவு உடைந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர், வீட்டுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, போலீசாரின் மோப்ப நாய் தங்களைக் கண்டுபிடிக்காமல் இருக்க, வீடு முழுவதும் அவர்கள் மிளகாய்ப்பொடியைத் தூவிச் சென்றிருப்பது தெரியவந்தது.