திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர்களை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இவ்வங்கியின் சுவரில் துளையிட்டு 5 லாக்கர்களை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி அருகே குவிந்து வருகின்றனர். தனிநபர் லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதால் அதில் உள்ள ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி வாடிக்கையாளர்கள் சோகக்தில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, “ வீட்டில் அதிக நகைகள் வைத்திருந்தால் பாதுகாப்பு இல்லை என்பதால்தான் இங்கே கொண்டு வந்து வைத்தோம். ஆனால் இங்கேயும் இப்படி ஆகிவிட்டதே..? வங்கி நிர்வாகம்தான் காணாமல் போன நகைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் ” எனத் தெரிவித்ததார்.
முக்கிய லாக்கர் என்பதால் சிலர், நகை, பணம் மட்டுமின்றி சொத்து பத்திரங்களையும் வைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளையர்களைகண்டறியும் வண்ணம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.