தமிழ்நாடு

சென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..!

சென்னை கடற்கரையில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்..!

Rasus

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி 12 சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான கதிரவன்-அனிதா ஆகிய இருவருக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விடுமுறை நாளில் இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர். கடற்கரையில் இருவரும் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென இரும்பு கம்பியால் கதிரவனை பின்பக்கமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், அவரது மனைவி அணிந்திருந்த 12 சவரன் செயின் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில், அங்கு விரைந்த காவல்துறையினர் கதிரவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வழிப்பறி கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.