சென்னை மயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை மயிலாப்பூர் சாரதாபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (58). இவர் நேற்றிரவு தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் அபிராமபுரத்தில் உள்ள மகள் வெண்ணிலா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த கொள்ளையர்கள், பரமேஸ்வரன் வீட்டின் மேற்கூரையை பெயர்த்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம், தங்க நகைகள், 30 ஆயிரம் மதிப்புள்ள எல்சிடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டனர்.
இன்று காலை பரமேஸ்வரன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.