தமிழ்நாடு

தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு பதிவு சான்று கட்டாயம்

தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு பதிவு சான்று கட்டாயம்

webteam

சென்னையில் உணவுப்பொருட்களை தள்ளுவண்டி கடை மற்றும் தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள், 100 ரூபாய் செலுத்தி பதிவுச்சான்றிதழ் பெற வேண்டுமென, சென்னை மாவட்ட ஆட்சியர்‌ உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம் 2006-ன் கீழ் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவு ‌செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தெருவில் உ‌ணவுப்பொருட்கள் விற்பவர்கள் முதல் ஐந்து நட்சத்திர விடுதி வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டும். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு‌ள்ள அறிவிப்பில், தள்ளு வண்டி கடை, தெருவில் கூவி விற்போர் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். 
ஆண்டுக்கு 12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுவோர், சிறு வணிகர்‌கள் 2000 ரூபாயும், உணவு தயாரிப்‌பாளர்கள் 3000 ரூபாயும், நட்சத்திர உணவு விடுதிகள் 5000 செலுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். உணவு பாதுகாப்பு உரிமம் பெற www.foodlicensing.fssai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.