தனுஷ்கோடியில் வீசிய சூறைக்காற்றால் 55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சாலை சேதமடைந்தது.
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்துக்கு மாறாக, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்தக் கடல் கொந்தளிப்புக் காணப்படுகிறது. கடல் அரிப்பை தடுப்பதற்காக கரையோரங்களில் போடப்பட்ட கற்களை, ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அதிவேகத்தில் வீசும் சூறைக்காற்று மணலை அள்ளி வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தனுஷ்கோடி கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்கு குளித்து வருகின்றனர். உயிரிழப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.