ஆளுநர் ஆர்.என்.ரவி pt web
தமிழ்நாடு

“60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுகிறார்களே தவிர...” - ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம்

60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேசுகிறார்களே தவிர தமிழருக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையும் செய்யவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

PT WEB

பாரதியார் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்த சீனி விஸ்வநாதனுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு, வானவில் பண்பாட்டு மையம் மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில், பாரதியார் இருக்கை அமைக்க முயன்று, இதுவரை வெற்றி பெறவில்லை என்றார். துணைவேந்தர்கள் அதீத அழுத்ததில் இருப்பதே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதியார் அகண்ட பாரதத்தை பற்றி பேசியதாகவும், இங்குள்ள சக்திகள் நாட்டை பிரிக்க நினைப்பதாகவும் கூறிய ஆர்.என்.ரவி, 60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுபவர்கள் தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார்.