தமிழ்நாடு

ஆர்கே நகர் தேர்தல்: திங்கட்கிழமை ஆலோசனை

ஆர்கே நகர் தேர்தல்: திங்கட்கிழமை ஆலோசனை

webteam

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து திங்கட்கிழமை டெல்லியில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஆலோசனை நடத்தவுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி மற்றும் இரண்டு ஆணையர்கள் தேர்தல் குறித்து முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்து புகார் வெளியான நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்கிறது. அதில் பங்கேற்பதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை காலை டெல்லி செல்கிறார்.