தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 23-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி, மக்கள்நலக் கூட்ட‌ணி, பாரதிய ஜனதா உள்ளிட்ட மற்ற கட்சிகள் வேட்பாளர்களது பெயர்களை இன்னும் அறிவிக்கவில்லை.