தமிழ்நாடு

கிறிஸ்துமசுக்கு முன் ஆர்.கே.நகர் தேர்தல் என தகவல்

கிறிஸ்துமசுக்கு முன் ஆர்.கே.நகர் தேர்தல் என தகவல்

webteam

ஆர்.கே.நகர் தொகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
டிசம்பர் 31ஆம்  தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்திய நிலையில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஓரிரு நாளில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியுடனான சந்திப்பில் தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வார இறுதிக்குள் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 


ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகு இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது, 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆர்.கே. இடைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கலாம் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ராஜேஷ் லக்கானி டெல்லி செல்ல இருக்கிறார்.