தமிழ்நாடு

மதுபிரியர்களுக்காக ஆற்றுக்கே வந்த சாராயக்கடை

மதுபிரியர்களுக்காக ஆற்றுக்கே வந்த சாராயக்கடை

webteam

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு மது அருந்த செல்ல முடியாதவர்களுக்காக ஆற்றங்கரையோரத்தில் வைத்து மது விற்கப்படுகிறது.

தென்பெண்ணையாற்றின் ஒரு கரையில் கடலூரும், மறுகரையில் புதுச்சேரியும் உள்ளது. புதுவையில் மலிவு விலையில் மதுபானம் கிடைக்கும் என்பதால் ஆற்றில் தற்காலிக பாலம் அமைத்து மதுப்பிரியர்கள் நாள்தோறும் சென்று வருவர். இந்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், புதுவை மணல்மேட்டிலிருந்து சாரயக்கடை உரிமையாளர் மதுபானங்களை தமிழக கரையோரத்தில் வைத்து விற்பனை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி தனது வாடிக்கையாளர்களை இழக்கக்கூடாது என்பதற்காக முள்ளிகிராம்பட்டு அருகே தற்காலிக சாரயக்கடை திறக்கப்பட்டுள்ளது.