தமிழ்நாடு

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கலைநயம் மிக்க உறைகிணறு

Sinekadhara

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் பானையுடன் கூடிய கலைநயம் மிக்க உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.

அகரத்தில் இரண்டாவதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன் முதலாக அகரத்தில் தற்போது 40 சென்டி மீட்டர் உயரமும் 63 சென்டிமீட்டர் விட்டமும் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது. இதுவரை உறைகிணறுகளின் பக்கவாட்டில் கயிறு போன்ற வடிவம் தென்பட்டுள்ள நிலையில் தற்போது உறைகிணற்றின் மேற்புறம் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. உறைகிணற்றின் மூன்று அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் மேலும் சில அடுக்குகள் இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.