தமிழ்நாடு

நம்பிக்கை தரும் ரிக் இயந்திரத்தை நிறுத்துவதற்கான பணிகள் தீவிரம்

நம்பிக்கை தரும் ரிக் இயந்திரத்தை நிறுத்துவதற்கான பணிகள் தீவிரம்

Rasus

நம்பிக்கை தரும் ரிக் இயந்திரத்தை நிறுத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 31 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி, குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்எல்சி, ஒஎன்ஜிசி, தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழித்தோண்டப்பட உள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.

குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம் மணப்பாறை வந்தடைந்துள்ளது. இந்த ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் குழந்தை சிக்கியுள்ள இடத்திற்கு சென்றுவிடும். மக்களின் இறுதி நம்பிக்கையாக தற்போது ரிக் இயந்திரமே உள்ளது. ரிக் இயந்திரத்தை நிறுத்துவற்கான பணிகள் தற்போது அந்த இடத்தில் தீவிரம் அடைந்துள்ளது. ரிக் இயந்திரம் சென்ற பின்பு அதன் பாகங்களை முறைப்படி பொருத்தி குழி தோண்டும் பணிகள் தொடங்க அதிகாலை 4 மணி ஆகும். அதன்பின் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் உள்ளது.