மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு அழைத்ததால் தற்போது விளக்கமளிப்பதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 2 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்போலோ மருத்துவர் குழு செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தது. அப்போது பேசிய மருத்துவர் ரிச்சர்ட் பீலே, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு அழைத்ததால் தற்போது விளக்கமளிப்பதாகத் தெரிவித்தார். முதலமைச்சரின் சிகிச்சை குறித்து உலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த விளக்கம் உதவும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.