நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு பரிசு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் தேதி இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ. 1001 வழங்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேற்படி பதிவு அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், மிரட்டல் விடுத்ததாக உள்ளது எனக் கூறி 17ஆம தேதி, பி 1 கடைவீதி காவல்நிலைய குற்ற எண்- 633/2021, U/s 504 , 506 (i) IPC படி அர்ஜூன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.