சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தவிர சசிகலா உள்பட மூவருக்கும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர்கள் மூவரும் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 4 ஆண்டு சிறைதண்டனையை மறுசீராய்வு செய்யக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடை விடுமுறை நடப்பதால் அதற்குபின் மனு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.