ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியதை அடுத்து, தேனியில் பாசி -ஸ்படிக மாலைகள் செய்யும் பணியில் நரிக்குறவ இன மக்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
தேனியில் கூட்டம் கூட்டமாக நரிக்குறவ இன மக்கள் மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி.எஸ்.டியால் செம்பு கம்பி, பாசிகள் விலை கூடி விட்டதாகவும், அதனால் இந்தாண்டு லாபம் குறைவாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் அதிகளவு ஆர்டர்கள் வந்திருப்பதால் மகிழ்ச்சியாக மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக நரிக்குறவ மக்கள் தெரிவித்துள்ளனர்.